Thursday, 4 August 2016

புரியாத தேடல் - 9

பள்ளிநாட்களைபோலபெற்றோரின்மற்றும்ஆசிரியரின்கண்காணிப்பில்இல்லாமல், சுதந்திரமாகசுற்றுவதற்கு, மனம்சொன்னபடிநடப்பதற்குஆரம்பிக்கும்வாலிபப்பருவத்தில்தான்நான்லயோலாகல்லூரியில்சேர்ந்தேன். அக்கல்லூரியில்எனக்கென்றுமுக்கியமானஅல்லதுபெரிதாகசாதித்தநிகழ்வுகள்என்றுகுறிப்பிடும்படிஇல்லைஎனினும், மேலும்பட்டப்படிப்பைஅங்குதொடரமுடியாதுஎன்றசூழ்நிலைவந்தபோதுதான்நான்பயத்தில்ஆழ்ந்தேன்.
அந்தபயத்தின்உந்துதலில்தான்சென்னையில்இருந்தஅனைத்துகல்லூரிகளுக்கும்அலைந்துதிரிந்துவிண்ணப்பங்களைசமர்ப்பித்தேன்.எதிர்காலத்தைபற்றியபயம்மனதில்பெரியதாகவளரதொடங்கியது.முயற்சியின்பலனாகபுதுகல்லூரியின்அட்மிஷன்வந்துசேர்ந்தது.மூன்றுவருடங்கள்அந்தகல்லூரியில்தஞ்சம்அடைந்தேன்.
பட்டப்படிப்பைதொடரஅட்மிஷன்கிடைத்தால்போதும்என்றசூழ்நிலையில்இருந்தஎனக்கு, பெரும்பாலானமாணவரும்அச்சம்காரணமாககடைசிவிருப்பமாகதேர்வுசெய்யும்கணிதப்பாடம்தான்கொடுக்கப்பட்டது. அதன்கூடவேபுள்ளியியல்மற்றும்வானியல்அதாவது, Statistics, Astronomy என்றபாடங்களும்எடுக்கவேண்டியகட்டாயம்.படிப்பதற்குஎந்தஒருவிருப்பத்தையும்தூண்டாதபாடங்களைதுணைபாடங்களாகஎடுக்கவேண்டியசூழ்நிலை.அந்தபாடங்களில்உள்ளபாடத்திட்டம்கூடஎனக்குஅப்போதுமுழுமையாகதெரியாது.
இங்குதான், என்நண்பனாகஇன்றுவரைஎன்னுடன்பயணிக்கும்திருசுந்தரேசனைசந்தித்தேன்.தற்போதுஇவர்என்அரசியல்கட்சியின்பொருளாளராகஉள்ளார். 
இந்தகல்லூரிபடிப்பின்போதுதான், ஒருபெண்ணைசந்தித்தேன்.களங்கமில்லாஅவள்அழகும்நேர்த்தியாகஉடைஅணிந்திருந்தவிதமும்என்னைமிகவும்கவர்ந்தது.இவளுடன்உண்டானஎன்நட்பைபற்றிநான்முன்னரேகூறியிருக்கிறேன்
கல்லூரியின்ஆரம்பநாட்களில்நான்கல்லூரியின்வளாகத்தில்இருந்தநேரத்தைவிடவெளியில்செலவிட்டநேரமேஅதிகம். 
நான்இதுவரைகடந்துவந்தஇளமைகாலத்தைபற்றிஉங்களுடன்பகிர்ந்துவருகிறேன்.இதுபோன்றதருணங்களைநான்ஞாபகம்கொள்ளும்போதுஎன்வாழ்க்கைமேலும்அழகாவதாகதோன்றுகிறது.அமைதியைஉணரமுடிகிறது .
கல்லூரியின் 2 ஆம்வருடம்முதல்தான்படிப்பில்என்கவனம்சென்றது.பட்டபடிப்பைமுடிக்காவிட்டால்எதிர்காலத்தில், ஒன்றும்செய்யமுடியாதுஎன்றபயம்வந்தது.போட்டிநிறைந்தசமுதாயத்தில்பல்வேறுசவால்களைசமாளிக்கஎன்னைநான்தயார்படுத்திக்கொள்ளவேண்டும்என்பதைஉணர்ந்தேன்.
ஒருசராசரிமாணவனின்வெகுசாதாரணமானநிலைஎன்னைகடுமையாகபாதித்தது.கணிதப்பட்டப்படிப்புஎன்வெற்றிக்கும்என்வளமானவாழ்க்கைகனவுக்கும்உதவும்என்றநம்பிக்கைஎனக்குஅன்றுஇல்லை.குழப்பமும்மிகுந்ததால்செய்வதறியாமல்வலியைஉணர்ந்தேன்.
சரியானபாதைஎன்ன, பாதையின்முடிவுஎன்ன, எந்தபாதையைதேர்ந்தெடுத்தால்என்பயணம்வெற்றியாகும்என்பதைஅறியாமல்ஆர்வமும்அச்சமும்கலந்துஎன்பயணத்தைதொடர்ந்தேன்.

எப்படிஎன்பதைபகிர்ந்துகொள்ளநானும்உங்களைபோலவேஆர்வமுடன்இருக்கிறேன்

புரியாத தேடல் - 8

கடந்த சில நாட்களாக, என் வாழ்க்கை பயணத்தின் 'புரியாத தேடலை' தொடர முடியவில்லை.ஆனால் பல புதிய அத்தியாயங்களுக்கு அறிமுகம் கிடைத்தது.பல அனுபவங்கள், பல விதமான சுவைகளில் கிடைத்தன.எதிர் காலத்தில் இந்த அத்தியாயங்களில் கிடைத்த அனுபவம் பற்றி எழுதுவேன்.
லயோலா கல்லூரியில் படிப்பதற்கு அனுமதி, அங்கு செல்வதற்கு நுங்கம்பாக்கம் வரை ரயில் பயணம், அதனால் கிடைத்த புது நண்பர்கள் ஆகிய அனைத்தும் எனக்கு ஒரு விதமான சுதந்திரத்தை தந்தது. பள்ளி நாட்களில் என்னிடம் இருந்த அக்கறையால் பெற்றோர்கள் காட்டிய அருகாமையும் அரவணைப்பையும் ஒருவிதமான கட்டுபாடானவாழ்க்கை முறையை கொடுத்திருந்தது போல உணர்ந்தேன். எனவே லயோலா கல்லூரி, புது சூழ்நிலை புது நண்பர்கள் எனக்கு சுதந்திரம் மட்டுமல்லாமல் ஒரு வித உற்சாகத்தையும் கொடுத்தது.
கல்லூரியின் ஆரம்ப நாட்களில் சினிமாவிற்கு செல்வதும், கல்லூரியின் வளாகத்திற்கு எதிரில் உள்ள குட்டி'ஸ் பங்க் என சொல்லப்படும் ஒரு பெட்டி கடையில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதும் ஒரு சராசரி மாணவனின் வழக்கமாக இருந்தது. இதில் நான் எந்த விதத்திலும் வேறுபடவில்லை.நானும் இப்படித்தான் காலத்தின் அருமை உணராத மாணவனாக நாட்களை கடத்தினேன், காலமே எனக்கு அதன் அருமையை புரிய வைக்கும் வரை இது தொடர்ந்தது.
இந்த விளையாட்டு போன்ற வாழ்க்கையில் அங்கு நடத்திய 'strike' நான் இன்று வரை மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கிறது. நான் அந்த பெருமை வாய்ந்த லயோலா கல்லூரியில் மேலும் படிப்பை தொடராமல் போவதற்கு அதுவே ஒரு காரணமாக ஆயிற்று.
பிறகு புது கல்லூரியில் BSc கணிதம் படிக்க ஆரம்பித்தேன்

ஆனால் அந்த புது கல்லூரி நாட்கள் இன்று வரை இனிமையாகவும் எனக்கு பின்னாளில் என் சாதனைகள் பலவற்றிற்கு அடிப்படையாகவும் இருந்தன.

புரியாத தேடல் - 7

என் சுவாரசியமான இளமை கால நினைவுகளுக்கு பிறகு மீண்டும் என் பள்ளி நாட்களை பற்றி சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறன்.சிறு சிறு அனுபவங்களை, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும்பொழுது, அந்த இனிமையான பயணத்தின் சுகத்தை இப்போதும் உணர்கிறேன். IIT கேந்த்ரிய வித்யாலயா வில் கழித்த குறுகிய பள்ளி காலத்திற்கு பிறகு, சென்னையின் ஒருகாலத்தில் அழகான அடையாளமான அடையாறு என்று அழைக்கப்பட்ட 'ஆற்றின்' கரையின் அமைந்துள்ள காந்தி நகர் St Patrick's பள்ளியில் என் படிப்பை தொடர்ந்தேன். இது ஒரு ஆங்கிலோ இந்திய பள்ளி.என்னை ஒரு திறமையான விளையாட்டு வீரனாக உருவாக்கியதில் இந்த பள்ளிக்கு மிகுந்த பங்குண்டு.கால் பந்து, கூடை பந்து, கிரிக்கெட் மற்றும் ஹாக்கி விளையாட்டுகளில் எனக்கு அதிக ஆர்வம் உண்டானது.இதை படிப்பவர்க்கு நான் ஒரு 'jack of all trades, master of none' என்று அழைக்கத்தோன்றும்.ஆனால் நான் எல்லா விளையாட்டுகளிலும் முழு ஈடுபாட்டுடன் இருந்ததால் அனைத்திலும் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றேன்.கால் பந்து விளையாட்டில் பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றேன்.இது என் பள்ளிக் காலத்தில் எனக்கு பெருமை சேர்த்த ஒரு நிகழ்ச்சி.
எரோல் சுலைவன், பார்னெட், நெஸ்லின் ப்ரீம், (Fuller) புல்லர், கோவிந்தராஜ், சலீம், பாலாஜி, பாரூக் ஆகியோர் என் நினைவில் இ ன்றும் நிற்கும் சில நண்பர்கள். நண்பன் பார்னெட், ஒரு முறை பாக்ஸிங் போட்டியில் கொடுத்த 'பஞ்ச்' தான், என்னை நான் ஒரு 'பாடி பில்டர்' ஆக உருவாக்க மிகப் பெரிய தூண்டுதலாக இருந்தது. இன்று வரை நான் கட்டான உடலமைப்போடும் ஆரோக்கியமான தோற்றத்தோடும் இருப்பதற்கு என் நண்பனுக்கு நான் நன்றி சொல்லவேண்டும்.
இந்த அழகான நாட்களை பற்றி கூறும்போது, நான் எப்போதும் பெருமைப்படும் நிகழ்வான ஒன்றை கூறாமல் இருக்க முடியாது. 1970 ஆம் ஆண்டு, புது தில்லியில் நடந்த இந்திய குடியரசு தின விழாவில், NCC இன் Air Wing Cadet ஆக, நம் தேசத்தின் ஆயுத படைகளுடன் அணிவகுத்து சென்றது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.

St Patrick's ன் நண்பர்களை பிரிந்தது சோகத்தை தந்தாலும், பிரபலமான லயோலா கல்லூரியில் எனக்கு கிடைத்த PUC அட்மிஷன் அந்த சோகத்தை மறக்கச் செய்தது.புது நண்பர்கள் அறிமுகம், சைதாபேட்டையிலிருந்து நுங்கம்பாக்கம் வரை ரயில் பயணங்கள் பற்றியெல்லாம் சொல்லப் போகிறேன்.கல்லூரியில் சேர்ந்தபின் PUC படிப்பை எப்படி தொடர்ந்தேன்.... எப்படி படித்தேன்....சொல்கிறேன்.

புரியாத தேடல் - 6

என் இளமை கால பள்ளி கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அந்த 15 வருடங்களில் சரி எது, தவறு எது, காதலுக்கும் பருவத்தினால் வரும் ஈர்ப்புக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன, பொறுப்பான நடவடிக்கைகள் என்றால் என்ன , பொறுப்பற்ற நடவடிக்கைகள் என்றால் என்ன என்ற கேள்விகளுக்கு என்னிடம் அப்போது பதில்கள் இல்லை.
என் மனநிலை குழப்பத்தில் சஞ்சரித்தது.என் நடவடிக்கையால் நன்மை அடைந்தேனா அல்லது ஏதேனும் இழந்தேனா என்று ஒன்றும் புரியவில்லை.அடுத்து என்ன செய்ய வேண்டும், எதிர்காலத்தில் நான் எதை நோக்கி பயணிக்க வேண்டும், எப்படி உயர வேண்டும் என்றும் விளங்கவில்லை.போட்டிகள் நிறைந்த இந்த உலகம் எனக்காக என்ன வைத்திருக்கிறது என்று புரியாத தருணம்.பட்டதாரியாக வேண்டும் என்று மட்டும் உறுதி இருந்தது, அதுவும் என் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்கு மட்டுமே என்பது புரிந்தபோது, உள்மனதில் வலித்தது.சரியான பாதையில் நான் பயணிக்கவில்லை என்பதை உணர்ந்தேன், ஆனால் அதை சரி செய்யும் வழி எனக்கு தெரியவில்லை.
எனக்கே என் வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லை, சரியான பாதையும் தெரியவில்லை.என் நிலைமை எனக்கே வெறுப்பாகவும், உண்மையற்றதாகவும் உணர்வற்றதாகவும் தோன்றியது.
எந்த ஒரு இளைஞனும் எந்த ஒரு சூழ்நிலையிலும் சந்திக்க கூடாத ஒரு குழப்ப நிலை.எனக்கு நேர்ந்த இந்த நிலைமை நானே எனக்கு ஏற்படுத்தியவை.என்னை யாரும் இந்த நிலைக்கு தள்ளவில்லை.நண்பர்களே, குழப்பமான எதிர்காலத்திற்கு உங்களை நீங்களே உட்படுத்தி கொள்ள வேண்டாம்.அப்படிப்பட்ட நிலைமை வெளி சூழ்நிலையால் நடப்பது என்பது வேறு.ஆனால் அதற்கு நீங்களே காரணமாக வேண்டாம்.அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சிக்கும் ஆளாக வேண்டாம்.
என் குழப்பமான மனநிலையை என் தந்தையாரால் புரிந்து கொள்ள முடிந்தது என்று நினைக்கிறன். என்னை ஊக்குவிப்பதற்காக IAS, IPS தேர்வுக்கு தயாராக்கும் பொருட்டு, சென்னையில், அப்போதைய மௌபரீஸ் சாலையில் இருந்த ஐயர் 'ஸ் அகெடமி என்ற பயிற்சி வகுப்பில் என்னை சேர்த்து விட்டார். அந்த பயிற்சி நிலையம், 100% வெற்றியை மட்டுமே கொடுத்து கொண்டிருந்த பிரபலமான இடம்.அங்கு சேர்ந்த பின்பும், தந்தையின் வார்த்தைக்கு மதிப்பு அளித்து சேர்ந்தேனே தவிர, எனக்கு தெளிவான பாதை தெரியவில்லை.கல்லூரி தோழர்கள் அனைவரும் வேறு இடம் சென்ற காரணத்தினால், இங்கு பயிற்சி வகுப்புக்கு வரும் நண்பர்கள் நெருக்கமானார்கள். அவர்களில் பலர், புத்தக புழுவாக எப்போதும் படித்துக்கொண்டே இருப்பவர்கள் .வாழ்க்கையை வேறு கோணத்தில் அணுகியவர்கள்.இவர்கள் மத்தியில், நான்.
அங்கு சக மாணவிகள் ஷோபா மற்றும் தீபா எனும் நண்பர்களுக்கும் எனக்கும், நாங்கள் மூவரும் வெளியில் காபி சாப்பிட செல்லும்போது அடிக்கும் அரட்டை தான் பொழுதுபோக்கு. எந்த ஒரு தெளிந்த இலட்சியமும் இல்லாமல் நான் அங்கு நாட்களை கடத்தியதை அவர்கள் அருகில் இருந்து கவனித்தாலும், ஒரு நாளும், என்னிடம் அதை பற்றி கூறி என்னை மேலும் வருத்தத்திற்கு உள்ளாக்கவில்லை. எங்களுடைய இந்த நட்பு ஒருவருக்கு மற்றவருடன் இருந்த தூய்மையான அன்பையும் மதிப்பையும் அதிகப்படுத்தியது.
அப்போதுதான் எனக்கு, ஒரு தமிழ் செய்தித்தாள் அலுவலகத்தில் இருந்து வேலைக்கு அழைப்பு வந்தது.பயிற்சி வகுப்பை தவிர்த்து விட்டு, என் முதல் பணியான, செய்தித்தாள் விநியோக பொறுப்பை, பெங்களூரில் ஆரம்பிக்க பயணித்தேன்.செய்திதாள் விநியோகம் செய்யும் பணி எனக்கு வாழ்க்கையில் ஒரு புது ஈடுபாட்டை உண்டாக்கியது. 'Newspaper boy' என்ற இந்த பணி எனக்கு வாழ்க்கையில் கற்று கொடுத்தது, அந்த வேலையின் சிரமங்கள், குடும்பத்தை விட்டு முதன்முதலில் வெளியில் சென்று வசிக்கும் அனுபவம் ஆகியவை பற்றி அடுத்து எழுதுவேன்.
இந்த அத்தியாயத்தை முடிக்கும் முன், ஒரு தகவல்.IAS பயிற்சி வகுப்பு நண்பர் திருமதி.தீபா கோபாலன், தோஹாவில் இந்திய தூதராக பணிபுரிந்து, சமீபத்தில், ஜப்பானில் இந்தியா தூதராக பணி புரிந்து ஓய்வு பெற்றார்.

தவற விட்ட வாய்ப்புகள் என்று பலர் எண்ணுவர்.இதை பற்றியும் மேலும் எழுதுவேன்.

புரியாத தேடல் - 5

என் முதல் காதல் மலர்ந்த விதத்தை அறிந்துகொள்ள ஆர்வமுடன் இருந்திருப்பீர்கள் என்று தெரியும்.அடையாரிலிருந்து எழும்பூர் செல்லும் பஸ் எண் 23. நிர்மா வெளுத்த வெள்ளை என்று அந்த காலத்தில் வெள்ளை நிறத்துக்கே தனி அங்கீகாரம் கொடுக்கப்பட்ட தூய்மையான வெள்ளை நிறத்தில், நன்கு கஞ்சி போட்டு சலவை செய்த சேலையை அவள் உடுத்தி இருந்த விதம் பார்த்தவுடனே என்னை கவர்ந்தது. மற்ற பெண்களிடம் இருந்து அவள் எனக்கு வித்தியாசமாய் தெரிந்தாள்.காண்பவர்களை கவரும் வகையில் இருக்கிறோம் என்பதை அவள் நன்கு உணர்ந்திருந்தாள்.அவளை பற்றி அவளிடமே இருந்த அந்த புரிதல், மேலும் அவளுக்கு அழகு சேர்த்ததுபோல் எனக்கு தோன்றியது.தினமும் ஒன்றாகவே பயணம் செய்ததால் ஒரு வித பரிச்சயம் உண்டானது.என்னுடைய கட்டான உடல் கட்டும் தோற்றமும் அவளை கவர்ந்திருக்கலாம்.கண்கள் பரிமாற்றம் வழியாக மலர்ந்த அந்த நட்பு புன்சிரிப்புகளுடன் வளர்ந்து, காதலாக மாறியது என உணர்ந்தேன்.இந்த நட்பு, சில்வியாவுடனான நட்பிலிருந்து வேறுபட்டு இருந்தது எனக்கு புரிந்தது.
எங்களது இந்த நட்பு கல்லூரியில் பிரபலமானது.ஒருவர் மேல் ஒருவருக்கு இருந்த அன்பும் அதிகமாகியது.இருவரும் சேர்ந்து வெளியில் சுற்றும் நேரம் அதிகமானதால், படிப்பின் மேல் எனக்கு இருந்த கவனம் முழுமையாக வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தது. நல்ல உடைகளை தேர்ந்து எடுத்து அணிவதிலும், அவளுடன் சேர்ந்து காபி அருந்த வெளியில் செல்வதிலும் ஸபையர் திரை வளாகத்தில் இருந்த ப்ளூ டைமண்ட் திரையரங்கதில் திரைப்படம் பார்ப்பதிலும் என் கவனம் முழுக்க சென்றது. அந்த உறவினை காதல் என்று அழைப்பதா அல்லது அந்த பருவத்தில் வரும் ஒரு விதமான ஈர்ப்பு என்று அழைப்பதா என்று எனக்கு தெரியவில்லை.ஒன்று மட்டும் புரிந்தது, எனக்கு கல்லூரி தேர்வுகளை விடவும் அதில் வெற்றி பெறுவதை விடவும், அவளுடன் செலவிடும் நேரத்தை பற்றிய கவனமே அதிகமாக இருந்தது.அதுவே முக்கியமாக இருந்தது.
இது ஒரு பொறுப்பற்ற செயல் என்பதோ, சரியான நடவடிக்கை இல்லை என்பதோ என்னால் உணரமுடியவில்லை என்பதுதான் உண்மை.
ஒரு நடுத்தர வர்க்கத்தின் தந்தைக்கு இருக்கும் கடமை, அதை நிறைவேற்ற அவர் மேற்கொள்ளும் சிரமம், வலி இவை ஒன்றுமே என்னை மாற்றவில்லை.மேலும் மேலும் பொறுப்பில்லாத மாணவனாகவும் மகனாகவும்தான் திரிந்தேன்.
இப்படியே சென்று கொண்டிருந்த என் பொறுப்பற்ற பயணம், திடீரென்று ஒருநாள் முடிவுக்கு வந்தது.என்னை சரியான பாதையில் திசை திருப்புவதற்காகவே நடந்த ஒரு தெய்வீக செயலாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.நாங்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக சென்றதை என் தந்தை பார்த்ததை தொடர்ந்து, வீட்டில், பஞ்சாயத்து நடந்தது.அனைத்து விளையாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.
தந்தையின் கடுமையான வார்த்தைகளை விட, நான் என் வாழ்க்கையில் அந்த மாணவ பருவத்தில் அப்படி நடந்துகொள்வது என் எதிர்காலத்தை எப்படி பாதிக்க போகிறது, இது போன்ற கவனச்சிதறல் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எப்படி தடையாக இருக்கிறது என்பதை மிகுந்த வலியுடன் என் தந்தை விளக்கியவிதம், எனக்கு மிக பெரிய பாடத்தை புகட்டியது. இது போன்ற ஈர்ப்புகள், பின்னாளில் படிப்பை முடித்து வாழ்க்கையில் முன்னேறிய பின் நிகழலாம் என்று அவர் கூறிய விதம் என்னை தலை குனிய வைத்தது என்று சொல்வதை விட, தலை நிமிரச் செய்தது என்று சொல்வது சரியாக இருக்கும்.

வீட்டின் சூழ்நிலை, தந்தையின் குடும்ப சுமை, இவை அனைத்தையும் பார்த்தும் ஒன்றும் செய்ய இயலவில்லை என்னும் அன்னையின் வலி, அனைத்தும் சேர்ந்து எனக்கு நிலைமையை புரிய செய்தன.
பிரிய வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தோம்.இருவருக்கும் பிரிவு மிகுந்த வலியை தந்தாலும், எங்களின் முன்னேற்றத்தை கருதி, நல்ல நண்பர்களாக பிரிவதென முடிவெடுத்தோம்.அந்த முடிவு இன்று வரை என்னை வருத்தப் பட வைக்கவில்லை.இரண்டு வருடங்கள் முன்னர் ஒரு பத்திரிக்கையில் வந்த கட்டுரையில், அவளை பற்றி படிக்க நேர்ந்தது.மிகவும் பிரபலமான, வெற்றிபெற்ற ஒருவராக அவள் வளர்ந்திருப்பதை பார்க்கும்போது, உண்மையில், உள் மனதில் இருந்து வாழ்த்தினேன்.பழைய நினைவுகளில் மூழ்கி, வாழ்க்கையின் இந்த உறவுகள் அவை சுற்றி நடந்த நிகழ்வுகள் எந்த அளவுக்கு என்னை பக்குவப் படுத்தி இருக்கிறன என்பதை உணர்கிறேன்.இந்த புரியாத தேடலில், சில புரிந்த, தெளிந்த அனுபவங்கள் கிடைத்தன.
St Patrick's பள்ளி வாழ்க்கை, லயோலா கல்லூரியில் PUC படிப்பு, புது கல்லூரியில் கணிதத்தில் பட்டபடிப்பு என்ற மாணவ பருவத்தின் அனைத்து கட்டங்களும், அரிய விலைமதிப்பற்ற நினைவுகளாக என் மனதில் இன்றும் உள்ளன.
கால்பந்து விளையாட்டு, Mr Madras University வெற்றிகள், பாடியாலா நகரில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பணம் இல்லாததால் கலந்தகொள்ள இயலாத நிலைமை அனைத்தும் என் வாழ்க்கையின் மறக்க முடியாத நிகழ்ச்சிகள்.
இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு வாய்ப்புகள் எல்லா திசையிலும் குவிந்த வண்ணம் உள்ளன. தங்களுடைய கவனத்தை முழுமையாக தாங்கள் தேர்ந்தெடுத்த திசை நோக்கி செலுத்தி, உழைப்பதற்கு தயாராக இருப்பார்களேயானால், அவர்களது இலட்சியத்தை விரைவில் அடைவார்கள் என்பது உறுதி.மீண்டும் தொடருகிறேன்.










புரியாத தேடல் - 4

கல்லூரி நாட்களில் கிடைத்த சுதந்திரம் பற்றி கூறியிருந்தேன்...அதை பற்றி சற்று விரிவாக.....
சென்னையின் லயோலா கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது என் போன்ற மாணவர்களுக்கு ஒரு கனவு.நான், என் PUC (Pre University Course) படிப்பினை அங்கு தொடர்ந்தேன்.பாதிரியார் குரியகோஸ், என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு மாமனிதர்.சக மாணவர்களிடையே ஒழுக்கத்துக்கு முதலிடம் கொடுத்து அந்த கல்லூரியின் நிர்வாகத்தை நடத்தி வந்தார்.
பெற்றோர்கள் கொடுத்த சுதந்திரத்தை சரியான முறையில் கையாள தெரியாமல், வாழ்க்கையின் தேவை பற்றிய கவனம் சற்றும் இல்லாமல் நான் ஈடுப்பட்ட 'strike' , என்னை அந்த கல்லூரியில் இருந்து வெளியேறி ராயபேட்டையில் உள்ள 'புது கல்லூரி'இல் சேர வைத்தது. இத்தனைக்கும் நான் நல்ல விளையாட்டு வீரன் என்பதை பாதிரியார் அறிந்த போதும், என்னை மேலும் அங்கு படிக்க அனுமதி வழங்கவில்லை.
ஆனால் அவரின் இந்த ஒரு முடிவு, என்னை பல கோணங்களில் சிந்திக்க வைத்தது.வாழ்க்கையை பற்றிய புரிதல், நேரம் மற்றும் பணத்தின் அருமை அனைத்தையும், நான் பின்னாளில் அறிந்துகொள்ள இந்த ஒரு நிகழ்ச்சி எனக்கு பெரிய பாடமாக அமைந்தது.
இப்படிப்பட்ட நிகழ்ச்சி ஒரு சராசரி கல்லூரி மாணவன் வாழ்க்கையில் நடக்க கூடிய ஒன்றுதான் என்றாலும், என் பெற்றோரின் அன்றைய நிலை, தந்தையின் 5000 ரூபாய் வருமானத்தில் குடும்பம் நடத்தவேண்டிய கடினமான சூழ்நிலை, என் மேல் என் குடும்பத்தினர் வைத்த நம்பிக்கை, எதிர்பார்ப்பு, வறுமையினால் கிடைக்க வேண்டிய வாய்ப்பு கிடைக்காமல் போகும் நிலை இவை அனைத்தும் என்னை இந்த 'strike'போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தடுத்து இருக்க வேண்டும். இதன் பின் விளைவு, நான் அந்த கல்லூரியில் படிக்க முடியாமல் போகும் அளவுக்கு சென்ற பின்னராவது என்னை மாற்றியிருக்க வேண்டும்.ஒரு பொறுப்புள்ள இளைஞனாக மாற்றியிருக்க வேண்டும்.
ஆனால், அந்த வயதும் அதற்கேற்ற பொறுப்பற்ற தன்மையும், என்னை 'strike', சண்டைகள், போன்றவற்றில் ஈடுபட செய்து, sapphire சினிமா, சத்யம் காம்ப்ளெக்ஸ், டிரைவ் இன் வூட்லண்ட்ஸ் போன்ற இடங்களில் சுற்ற செய்து , ஸ்டெல்லா மேரிஸ் பெண்களை பின் தொடர செய்து, எத்திராஜ் கல்லூரி மாணவிகள் அதிகம் உள்ள பஸ்ஸில் பயணம் செய்ய வைத்து என்னை ஒரு பொறுப்பில்லா மாணவனாகதான் மாற்றின.

எல்லாவற்றுக்கும் மேலாக, அப்போதுதான் என் வாழ்க்கையில் இன்னொரு சுவை ஊட்டும் வகையில், நான் என் முதல் காதலை சந்தித்தேன்.நன்கு படித்த, அறிவுள்ள, எல்லாரையும் கவரக்கூடிய அழகுள்ள, உடையிலும் நடையிலும் காண்பவரை மயக்ககூடிய அளவில் இருந்த பெண்ணை சந்தித்தேன்.அவளை சந்தித்த பின், படிப்பின் மேல் என் கவனம் என்னாவாயிற்று. என் தந்தையின் கனவு நனவானதா அல்லது தவிடு பொடியானதா ....மேலும் தெரிந்து கொள்ள அடுத்த அத்தியாயம் வரை பொறுத்திருங்கள் நண்பர்களே.

புரியாத தேடல் -3

நான் சில்வியாவிடம் கேட்ட கேள்விக்கு அவள் என்ன பதில் கூறி இருப்பாள் என்று நீங்கள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பது தெரிகிறது.நீங்கள் எதிர்பார்த்ததுபோல், பெரிய ஆச்சர்யங்களுடன் கூடிய நிகழ்ச்சி எதுவும் நடக்கவில்லை.அவள், என்னிடம் இருந்து 'அந்த கேள்வியை' எதிர்பார்க்கவில்லை என்றே நினைக்கிறன்.அவள் கண்களில் ஒரு சிறிய குழப்பம்.உடனடியாக சுதாரித்து கொண்டு, சைக்கிளை என்னிடம் தந்து ஓட்டி பார்க்கச் சொன்னாள்.எங்களிடையே நடந்த அந்த சைக்கிள் பரிமாற்றம், ஒரு நல்ல நட்பாக மலர்ந்தது.
அதுவரை உணர்ந்திராத, ஒரு புத்தம் புது மலர் பூத்தது போன்ற இனிய அனுபவத்தை அந்த நட்பு எனக்கு தந்தது.அவள் மதிய இடைவெளியில் என்னோடு ஒரு புது விதமான விளையாட்டை ஆரம்பித்தாள். 'Hide and Seek' என்று அழைக்கப்படும் விளையாட்டை வித்தியாசமான முறையில் கற்று கொடுத்தாள். கசக்கி எறிந்த காகிதத்தை என் கண்ணில் படும்படி வீசி விட்டு செல்வாள்.அதை எடுத்து பார்க்கும் போது அவள் அங்கிருந்து நகர்ந்து சென்று விடுவாள்.அந்த கசங்கிய காகிதத்தில் எங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள ஏதாவது ஒரு இடம் வரையபட்டிருக்கும்.அந்த இடத்தை நான் கண்டு பிடித்து அங்கு போய் சேரும்போது, எனக்காக இன்னொரு காகிதத்தை விட்டு சென்றிருப்பாள்.அந்த காகிதத்தை வைத்து நான் அடுத்த இடத்தை கண்டுபிடித்து சேர வேண்டும்.ஆங்கிலத்தில் 'Treasure Hunt' என்று அழைக்கப்படும் இந்த விறுவிறுப்பான விளையாட்டு கடைசியில் வகுப்பறையில் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் சிறு புன்னகையுடன் முடிவுக்கு வரும்.
குறும்பு வயதில் அரும்பிய நட்பு ஆரம்பித்த விதம் வேடிக்கையாக இருந்தாலும், இன்று கூட என் உதட்டில் புன்னகை வரவழைக்கும் நட்பு அது.எங்கள் உறவு அப்படியே தொடர்ந்து, நாங்கள் மிக நெருங்கிய நண்பர்களானோம்.பள்ளி நேரம் முடிந்து, இருவரும் சைக்கிள்களை எடுத்து கொண்டு சவாரி செல்வோம்.நிழல்தரும் மரத்தினடியில் நிறுத்திவிட்டு கதை கதையாய் பேசினோம். என்னை அறியாமலே நான் அவளுடன் மிக நெருங்கிய நண்பனானேன் .இப்படியே வளர்ந்துகொண்டிருந்த எங்கள் நட்பு திடீரென்று முடிவுக்கு வந்தது.
ஒருநாள் நாங்கள் இருவரும் பஸ் நிலையத்தில் சந்தித்து பேசி கொண்டிருந்தோம்.சில்வியாவின் தந்தை எங்களை அப்போது பார்த்ததுதான், எங்கள் நட்பை முடிவுக்கு கொண்டுவந்தது.இப்படியாக முடிந்த என் முதல் ஈர்ப்பு அல்லது நட்பு என்னில் பெரிய பாதிப்பை அப்போது ஏற்படுத்த வில்லை.சில்வியா திரும்ப ஜெர்மனிக்கு திரும்ப போக வேண்டி வந்தது.தான் கண்டிப்பாக தொடர்பில் இருக்க போவதாக ஒரு கடிதம் மூலம் தெரிவித்த அவள், சொன்னது போலவே இரண்டு மாதங்கள் ஜெர்மனியில் இருந்து கடித தொடர்பில் இருந்தாள்.அந்த கடிதங்கள் நின்ற போதுதான், உண்மையில் அவளின் நட்பையும் அதன் தாக்கத்தையும் அதன்மூலம் வந்த வலியையும் உணர்ந்தேன்.
சில்வியா இப்போது எங்கிருந்தாலும், எங்களுடைய அந்த இனிய நட்பை மறந்திருக்க மாட்டாள் என்றே நினைக்கிறன்.
வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டியது தானே, மனிதனின் இயல்பு.நானும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தேன்.
என்னுடைய கவனத்தை முழுமையாக படிப்பிலும் விளையாட்டுகளிலும் செலுத்தினேன்.பள்ளியில் சமஸ்கிருதம் மொழி எனக்கு கடினமாக இருந்ததினால், தந்தையிடம் கேட்டு, காந்தி நகர், அடையாரில் உள்ள St. Patrick's பள்ளிக்கு மாற்றிக் கொண்டேன். படிப்பின் இடையே குறும்புகளும் சேட்டைகளும் குறையவில்லை என்றாலும், என் பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களும் பெருமை படும் வண்ணம் நல்ல மதிப்பெண்களையும் வெகுமதிகளையும் பெற்று தந்தேன். அதனால் ஒன்றும் என் சேட்டைகளுக்கான தண்டனை ஒன்றும் குறைக்கப்படவில்லை.இன்றும் பசுமையான நினைவுகளாய் என் மனதில் இருக்கும் ஆசிரியர்களும் சக நண்பர்களும் அந்த கால நிகழ்வுகளும் என்னை வேறு உலகத்திற்கு எடுத்து சென்று விடுகின்றன.
பாதிரியார் சகோ.பிரான்சிஸ், நண்பர்கள் சலைவன், பார்னெட், சலீம் என்று இன்னும் பலர் என் நினைவில் இன்றும் உள்ளனர்.
படிப்பு, விளையாட்டு, நட்பு மற்றும் உறவுகள் என்று வாழ்வின் அனைத்து அம்சங்களையும் எப்படி பக்குவத்துடன் அணுகுவது என்பதை எளிதில் கற்று கொண்டேன்.வாழ்வின் அடிப்படை கோட்பாடுகளை, அதனை கையாளும் திறமைகளை வளர்த்துக்கொண்டேன்.
இதன் பிறகு மிக முக்கிய திருப்பு முனையாக, இன்று வரை சென்னையில், மிகச் சிறந்த கல்லூரிகளில் ஒன்றான 'லயோலா' கல்லூரியில் படிப்பை தொடர்ந்தேன்.வேடிக்கை, விளையாட்டு, பெற்றோரின் கட்டுபாட்டில் இருந்து சுதந்திரம் என்ற அனைத்தும் உள்ளடக்கிய கல்லூரி வயது.இந்த சுதந்திரத்தை நான் எப்படி பயன்படுத்தினேன். அதனால் என்ன நேர்ந்தது...
அடுத்த அத்தியாத்தில் ......