என் சுவாரசியமான இளமை கால
நினைவுகளுக்கு பிறகு மீண்டும் என் பள்ளி நாட்களை பற்றி சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம்
என்று நினைக்கிறன்.சிறு சிறு அனுபவங்களை, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும்பொழுது, அந்த
இனிமையான பயணத்தின் சுகத்தை இப்போதும் உணர்கிறேன். IIT கேந்த்ரிய வித்யாலயா வில் கழித்த
குறுகிய பள்ளி காலத்திற்கு பிறகு, சென்னையின் ஒருகாலத்தில் அழகான அடையாளமான அடையாறு
என்று அழைக்கப்பட்ட 'ஆற்றின்' கரையின் அமைந்துள்ள காந்தி நகர் St Patrick's பள்ளியில்
என் படிப்பை தொடர்ந்தேன். இது ஒரு ஆங்கிலோ இந்திய பள்ளி.என்னை ஒரு திறமையான விளையாட்டு
வீரனாக உருவாக்கியதில் இந்த பள்ளிக்கு மிகுந்த பங்குண்டு.கால் பந்து, கூடை பந்து, கிரிக்கெட்
மற்றும் ஹாக்கி விளையாட்டுகளில் எனக்கு அதிக ஆர்வம் உண்டானது.இதை படிப்பவர்க்கு நான்
ஒரு 'jack of all trades, master of none' என்று அழைக்கத்தோன்றும்.ஆனால் நான் எல்லா
விளையாட்டுகளிலும் முழு ஈடுபாட்டுடன் இருந்ததால் அனைத்திலும் நல்ல முறையில் தேர்ச்சி
பெற்றேன்.கால் பந்து விளையாட்டில் பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம்
வென்றேன்.இது என் பள்ளிக் காலத்தில் எனக்கு பெருமை சேர்த்த ஒரு நிகழ்ச்சி.
எரோல் சுலைவன், பார்னெட்,
நெஸ்லின் ப்ரீம், (Fuller) புல்லர், கோவிந்தராஜ், சலீம், பாலாஜி, பாரூக் ஆகியோர் என்
நினைவில் இ ன்றும் நிற்கும் சில நண்பர்கள். நண்பன் பார்னெட், ஒரு முறை பாக்ஸிங் போட்டியில்
கொடுத்த 'பஞ்ச்' தான், என்னை நான் ஒரு 'பாடி பில்டர்' ஆக உருவாக்க மிகப் பெரிய தூண்டுதலாக
இருந்தது. இன்று வரை நான் கட்டான உடலமைப்போடும் ஆரோக்கியமான தோற்றத்தோடும் இருப்பதற்கு
என் நண்பனுக்கு நான் நன்றி சொல்லவேண்டும்.
இந்த அழகான நாட்களை பற்றி
கூறும்போது, நான் எப்போதும் பெருமைப்படும் நிகழ்வான ஒன்றை கூறாமல் இருக்க முடியாது.
1970 ஆம் ஆண்டு, புது தில்லியில் நடந்த இந்திய குடியரசு தின விழாவில், NCC இன் Air
Wing Cadet ஆக, நம் தேசத்தின் ஆயுத படைகளுடன் அணிவகுத்து சென்றது என் வாழ்நாளில் மறக்க
முடியாத ஒன்று.
St Patrick's ன் நண்பர்களை
பிரிந்தது சோகத்தை தந்தாலும், பிரபலமான லயோலா கல்லூரியில் எனக்கு கிடைத்த PUC அட்மிஷன்
அந்த சோகத்தை மறக்கச் செய்தது.புது நண்பர்கள் அறிமுகம், சைதாபேட்டையிலிருந்து நுங்கம்பாக்கம்
வரை ரயில் பயணங்கள் பற்றியெல்லாம் சொல்லப் போகிறேன்.கல்லூரியில் சேர்ந்தபின் PUC படிப்பை
எப்படி தொடர்ந்தேன்.... எப்படி படித்தேன்....சொல்கிறேன்.
No comments:
Post a Comment