பெரும்பாலான மக்களின் வாழ்வில்
வாலிப பருவம் என்பது இனிப்பான காலம்.என் இளமை காலங்களிலும் சில இனிமையான சம்பவங்கள்.துள்ளலான
அந்த வாழ்க்கையும் நல்ல புரிதல்களை கற்று கொடுத்தது.உங்கள் அனைவருக்கும் அதை தெரிந்து
கொள்ள மிகுந்த ஆர்வம் என்பது எனக்கு தெரியும்.
IIT வளாகத்தில் உள்ள சென்ட்ரல்
பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்றுகொண்டிருந்தேன்.எனது தந்தையின் கோபத்திற்கு ஆளாக கூடாது
என்ற பயத்தினாலேயே படித்தாகவேண்டும் என்ற சூழல் கடினமாக இருந்தாலும், சிரமத்துடன் படித்து
கொண்டிருந்தேன்.அப்போதுதான் முதன் முதலில் ஒரு பெண்ணின் நட்பையும் அவள்மீது ஒரு வித
ஈர்ப்பையும் உணர்ந்தேன்.அவள் ஒரு தங்க நிற கூந்தல் கொண்ட அழகான ஜெர்மன் பெண்.கூட படிக்கும்
பெண்களிடம் பேச, அந்த வயதுக்கே உரிய தயக்கம்.ஆனாலும் என் சக நண்பர்கள் பலர் அவளிடம்
நட்புடன் இருக்க நிறைய முயற்சி செய்தார்கள்.எங்கள் அனைவருக்கும் அவளிடம் ஒரு ஈர்ப்பு
இருந்தது உண்மை.நானும் அவளிடம் நெருங்கி பேசி அவளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள
ஆவல் கொண்டேன்.
அந்த ஒரு நாளும் வந்தது......முழு
தைரியத்தையும் வரவழைத்து அவளை நெருங்கி நான் என்ன கேட்க வேண்டும் என்று நினைத்தேனோ
அதை கேட்க முற்பட்டேன்.சிரிப்பு வருகிறதா நண்பர்களே. என்ன கேட்டிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்......
சைக்கிள் நிறுத்தும் இடத்திற்கு
சென்று அவளிடம் நெருங்கினேன்.என்னை கண்டதும் அவள் உதட்டில் சிறு புன்னகை தவழ்ந்தது.பல
வித விளையாட்டுகளில் என் திறமையை நிரூபித்து, Sub Junior Champion பட்டம் வாங்கிய மாணவன்
என்பதால், பள்ளியில் நான் பிரபலமான மாணவன் என்ற பெயரை பெற்றிருந்தேன்.எனவே அவள் தயக்கம்
இன்றி சிறு புன்னகையுடன் என்னை எதிர் நோக்கினாள்.
பதிலுக்கு புன்னகைத்து அவளிடம்
கேட்டேன் " , உன் ஜெர்மன் சைக்கிளில் நான் ஒரு ரவுண்டு போகலாமா. என் ஹெர்குலிஸ்
சைக்கிள் இந்தியாவில் செய்தது. இந்த இரண்டு சைக்கிளுக்கும் என்ன வித்தியாசம் என்று
எனக்கு தெரிந்து கொள்ள விரும்புகிறேன்"
என்ன நண்பர்களே, பதிலுக்கு
என்ன சொல்லியிருப்பாள் அல்லது செய்திருப்பாள் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறதா.....நானும்தான்
மிகுந்த ஆவலுடன் அவள் பதிலுக்காக காத்திருந்தேன். அந்த அழகான ஜெர்மன் பெண்ணின் பெயர்
சில்வியா பிஸான்ஸ்.
அடுத்து என்ன நடந்தது என்பது,
நாளைய அத்தியாயத்தில் ........
No comments:
Post a Comment