Thursday, 4 August 2016

புரியாத தேடல் - 8

கடந்த சில நாட்களாக, என் வாழ்க்கை பயணத்தின் 'புரியாத தேடலை' தொடர முடியவில்லை.ஆனால் பல புதிய அத்தியாயங்களுக்கு அறிமுகம் கிடைத்தது.பல அனுபவங்கள், பல விதமான சுவைகளில் கிடைத்தன.எதிர் காலத்தில் இந்த அத்தியாயங்களில் கிடைத்த அனுபவம் பற்றி எழுதுவேன்.
லயோலா கல்லூரியில் படிப்பதற்கு அனுமதி, அங்கு செல்வதற்கு நுங்கம்பாக்கம் வரை ரயில் பயணம், அதனால் கிடைத்த புது நண்பர்கள் ஆகிய அனைத்தும் எனக்கு ஒரு விதமான சுதந்திரத்தை தந்தது. பள்ளி நாட்களில் என்னிடம் இருந்த அக்கறையால் பெற்றோர்கள் காட்டிய அருகாமையும் அரவணைப்பையும் ஒருவிதமான கட்டுபாடானவாழ்க்கை முறையை கொடுத்திருந்தது போல உணர்ந்தேன். எனவே லயோலா கல்லூரி, புது சூழ்நிலை புது நண்பர்கள் எனக்கு சுதந்திரம் மட்டுமல்லாமல் ஒரு வித உற்சாகத்தையும் கொடுத்தது.
கல்லூரியின் ஆரம்ப நாட்களில் சினிமாவிற்கு செல்வதும், கல்லூரியின் வளாகத்திற்கு எதிரில் உள்ள குட்டி'ஸ் பங்க் என சொல்லப்படும் ஒரு பெட்டி கடையில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதும் ஒரு சராசரி மாணவனின் வழக்கமாக இருந்தது. இதில் நான் எந்த விதத்திலும் வேறுபடவில்லை.நானும் இப்படித்தான் காலத்தின் அருமை உணராத மாணவனாக நாட்களை கடத்தினேன், காலமே எனக்கு அதன் அருமையை புரிய வைக்கும் வரை இது தொடர்ந்தது.
இந்த விளையாட்டு போன்ற வாழ்க்கையில் அங்கு நடத்திய 'strike' நான் இன்று வரை மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கிறது. நான் அந்த பெருமை வாய்ந்த லயோலா கல்லூரியில் மேலும் படிப்பை தொடராமல் போவதற்கு அதுவே ஒரு காரணமாக ஆயிற்று.
பிறகு புது கல்லூரியில் BSc கணிதம் படிக்க ஆரம்பித்தேன்

ஆனால் அந்த புது கல்லூரி நாட்கள் இன்று வரை இனிமையாகவும் எனக்கு பின்னாளில் என் சாதனைகள் பலவற்றிற்கு அடிப்படையாகவும் இருந்தன.

No comments:

Post a Comment