கல்லூரி நாட்களில் கிடைத்த
சுதந்திரம் பற்றி கூறியிருந்தேன்...அதை பற்றி சற்று விரிவாக.....
சென்னையின் லயோலா கல்லூரியில்
படிக்க வேண்டும் என்பது என் போன்ற மாணவர்களுக்கு ஒரு கனவு.நான், என் PUC (Pre
University Course) படிப்பினை அங்கு தொடர்ந்தேன்.பாதிரியார் குரியகோஸ், என் வாழ்வில்
மறக்க முடியாத ஒரு மாமனிதர்.சக மாணவர்களிடையே ஒழுக்கத்துக்கு முதலிடம் கொடுத்து அந்த
கல்லூரியின் நிர்வாகத்தை நடத்தி வந்தார்.
பெற்றோர்கள் கொடுத்த சுதந்திரத்தை
சரியான முறையில் கையாள தெரியாமல், வாழ்க்கையின் தேவை பற்றிய கவனம் சற்றும் இல்லாமல்
நான் ஈடுப்பட்ட 'strike' , என்னை அந்த கல்லூரியில் இருந்து வெளியேறி ராயபேட்டையில்
உள்ள 'புது கல்லூரி'இல் சேர வைத்தது. இத்தனைக்கும் நான் நல்ல விளையாட்டு வீரன் என்பதை
பாதிரியார் அறிந்த போதும், என்னை மேலும் அங்கு படிக்க அனுமதி வழங்கவில்லை.
ஆனால் அவரின் இந்த ஒரு முடிவு,
என்னை பல கோணங்களில் சிந்திக்க வைத்தது.வாழ்க்கையை பற்றிய புரிதல், நேரம் மற்றும் பணத்தின்
அருமை அனைத்தையும், நான் பின்னாளில் அறிந்துகொள்ள இந்த ஒரு நிகழ்ச்சி எனக்கு பெரிய
பாடமாக அமைந்தது.
இப்படிப்பட்ட நிகழ்ச்சி ஒரு
சராசரி கல்லூரி மாணவன் வாழ்க்கையில் நடக்க கூடிய ஒன்றுதான் என்றாலும், என் பெற்றோரின்
அன்றைய நிலை, தந்தையின் 5000 ரூபாய் வருமானத்தில் குடும்பம் நடத்தவேண்டிய கடினமான சூழ்நிலை,
என் மேல் என் குடும்பத்தினர் வைத்த நம்பிக்கை, எதிர்பார்ப்பு, வறுமையினால் கிடைக்க
வேண்டிய வாய்ப்பு கிடைக்காமல் போகும் நிலை இவை அனைத்தும் என்னை இந்த 'strike'போன்ற
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தடுத்து இருக்க வேண்டும். இதன் பின் விளைவு, நான்
அந்த கல்லூரியில் படிக்க முடியாமல் போகும் அளவுக்கு சென்ற பின்னராவது என்னை மாற்றியிருக்க
வேண்டும்.ஒரு பொறுப்புள்ள இளைஞனாக மாற்றியிருக்க வேண்டும்.
ஆனால், அந்த வயதும் அதற்கேற்ற
பொறுப்பற்ற தன்மையும், என்னை 'strike', சண்டைகள், போன்றவற்றில் ஈடுபட செய்து,
sapphire சினிமா, சத்யம் காம்ப்ளெக்ஸ், டிரைவ் இன் வூட்லண்ட்ஸ் போன்ற இடங்களில் சுற்ற
செய்து , ஸ்டெல்லா மேரிஸ் பெண்களை பின் தொடர செய்து, எத்திராஜ் கல்லூரி மாணவிகள் அதிகம்
உள்ள பஸ்ஸில் பயணம் செய்ய வைத்து என்னை ஒரு பொறுப்பில்லா மாணவனாகதான் மாற்றின.
எல்லாவற்றுக்கும் மேலாக, அப்போதுதான்
என் வாழ்க்கையில் இன்னொரு சுவை ஊட்டும் வகையில், நான் என் முதல் காதலை சந்தித்தேன்.நன்கு
படித்த, அறிவுள்ள, எல்லாரையும் கவரக்கூடிய அழகுள்ள, உடையிலும் நடையிலும் காண்பவரை மயக்ககூடிய
அளவில் இருந்த பெண்ணை சந்தித்தேன்.அவளை சந்தித்த பின், படிப்பின் மேல் என் கவனம் என்னாவாயிற்று.
என் தந்தையின் கனவு நனவானதா அல்லது தவிடு பொடியானதா ....மேலும் தெரிந்து கொள்ள அடுத்த
அத்தியாயம் வரை பொறுத்திருங்கள் நண்பர்களே.
No comments:
Post a Comment